இரவு நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

இரவு நல்ல தூக்கம் வரலையா..அப்போ இதை மறக்காம செய்துடுங்க !

 • என்னதான் கடினமாக அன்றைய நாள் முழுக்க உழைத்தாலுமே இரவு தூக்கம் வருவதில்லை.
 • ஏதாவது ஒரு விதமான மனச்சிந்தனையிலே இருந்துக்கொண்டே இருப்போம்.
 • புரண்டு, புரண்டு படுத்தாலும் தூக்கம் என்பது கொஞ்சமும் இருக்காது.
  ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக இருக்க உணவு எந்தளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு தூக்கமும் அவசியமாகும்.
 • சரியாக ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் வரை தூங்கவேண்டும்.அப்போது தான் உடலும்,மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.அதோடு முகமும் பொலிவோடு பளபளவென இருக்கும்.
 • இரவு உணவும் தூக்கமின்மையும் :
  இரவு நாம் உண்ணக்கூடிய உணவுக்கும் தூக்கத்திற்கும் நிறைய சம்மந்தங்கள் இருக்கிறது.
 • அதாவது திரவ உணவுகள்,அதிகம் கொழுப்புள்ள உணவுகள் மற்றும் காரமான உணவுகள் போன்றவை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு காரணமாகும்.

இரவு நல்ல தூக்கம்

இரவு நல்ல தூக்கம் வர என்ன சாப்பிடணும் ?

 • இரவு தூங்குவதற்கு முன் இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியமான உறக்கம் வரும்.
  1.பால்
  2.வாழைப்பழம்
  3.தயிர்
  4.வால்நெட்ஸ்
  5.பாதாம் பருப்பு
  6.கிவி பழம்

தூக்கத்திற்கு பால் :

 • தினமும் இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக ( 30 min before) பால் குடித்துவிட்டு தூங்கினால் இரவில் நல்ல ஆரோக்கியமான தூக்கமானது வரும்.
 • ஏனென்றால் இந்த பாலில் மெலடோனின் மற்றும் ட்ரைப்டோஃபோன் போன்றவை உள்ளது.
 • இதனால் 1 கிளாஸ் பால் குடித்தால் நல்ல ஆரோக்கியமான தூக்கமானது வரக்கூடும்.

https://amazeout.com/சர்க்கரை-நோயாளிகள்-அண்ணா/

தூக்கத்திற்கு வாழைப்பழம் :

 • ரத்த அழுத்தம் உள்ளவருக்கு இரவில் தூக்கம் வராது.எனவே அவர்கள் இரவு தூங்கும் முன் 1 வாழைப்பழம் தினந்தோறும் சாப்பிட்டு வர நிம்மதியான தூக்கம் வரும்.
 • இதில் கார்பஸ் மற்றும் ட்ரைப்டோஃபோன் உள்ளது.இதனால் தூக்கம் எளிதாக படுத்தவுடனே வரும்.
 • இரவு தூக்கமும், பாதமும்
  இரவு தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்பாக 4 பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும்.
 • ஏனென்றால் இதில் மெக்னீசியம் தாதுக்கள் உள்ளதால் தசைகளை ரிலாக்ஸ் செய்து தூக்கம் வரச்செய்யும்.
 • அதோடு இதில் தூக்கத்தை தூண்டக்கூடிய கார்போஹட்ரேட் மற்றும் ட்ரைடோஃபோன் உள்ளது.

https://amazeout.com/diet-இல்லாமல்-உடல்-எடை-குறைப்/

தூக்கத்திற்கு வால்நெட்ஸ் :

 • நீங்க இரவு நேரத்தில் அதாவது தூங்குவதற்கு ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக கள்ளஉருண்டை ஒரு 2 (அதாவது சிறிய அளவில் இருந்தால் ) சாப்பிட்டு வர தூக்கமானது ஆரோக்கியமாக வரும்.
 • இதில் தூக்கத்தை தூண்டக்கூடிய 2 முக்கிய பொருள் இருக்கிறது.அதாவது மெலடோனின் மற்றும் செரோடோனின் இருக்கிறது.
 • அதுமட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற ஒரு நொறுக்கு தீனியாகும்.குறிப்பாக பெண்களுக்கு அதிகளவு நன்மையை பயக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/

கிவிப்பழமும் உறக்கமும் :

 • தினமும் கிவிப்பழம் இரவு உணவுக்கு பின் சாப்பிட்டு வர தூக்கம் எளிமையாக படுத்தவுடனே வரும்.இதில் அதிகளவு செரோடோனின் உள்ளது.
 • இதனால் தூக்கம் வரும்
  எனவே இதையெல்லாம் சாப்பிட்டுவர எந்தவித இடையூறும் இன்றி நல்ல ஆரோக்கியமான தூக்கத்தை தூங்கலாம்.
 • அதேபோல தூக்கமின்மையால் வரக்கூடிய உடற்சோர்வு ,தலைவலி ,மயக்கம் போன்றவை நீங்கும்.உடலும் மனதும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

இதை ஒரு வாரம் செய்து பாருங்களே ! அப்புறம் நீங்கள் ஆச்சரிய படுவீங்க !

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.