உடல் எடை குறைக்க உதவும் கலோரிகள் குறைவான உணவு

கலோரிகள் குறைவான உணவு :

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கலோரிகள் குறைவான உணவு தேர்வு செய்ய வேண்டும்…கலோரிகள் அதிகம் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

 • தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் உடல் எடை அதிகரிப்பு தான்.
 • சிலர் என்னதான் உடற்பயிற்சி மற்றும் டயட் ஃபாலோ பண்ணாலும் அவங்களுக்கு உடல் எடை குறைப்பது மிகமிக சிரமமானதாகவே இருக்கிறது.

கலோரியும் உடல் பருமனும் :

 • நாம் டயட்டில் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவிலே கலோரிகள் நிறைந்து உள்ளது.
 • அதனால் உடல் எடையை குறைக்க முடியாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 • உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கவேண்டும் என்று சொன்னால் குறைந்த கலோரிகள் மற்றும் அதிகளவு புரோட்டீன்,வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்ததாக தான் இருக்கவேண்டும்.
 • எளிமையாக வேலை செய்யக்கூடியவர்கள் ஒரு நாளிற்கு 1200 கலோரிகள் உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
 • எனவே அந்த வகையில் தான் குறைந்த கலோரிகள் கொண்ட இந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடவேண்டும்.

கலோரிகள் குறைவான உணவு

கலோரிகள் குறைவான உணவுகள் :

காலிஃபிளவர் :

 • பலருக்கு பிடித்த காய்களில் ஒன்று தான் இந்த காலிப்ளவர் . இதில் மிக குறைந்த அளவு தான் கலோரிகள் உள்ளது.
 • இதில் நீர்ச்சத்து அதிகமாகவும்,நார்ச்சத்தும் நிறைந்து உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும், அதோடு உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

முலாம் பழம் ஜூஸ் :

 • முலாம் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் மிக குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
 • இந்த பழத்தை அப்படியே சாப்பிடலாம். இல்லையென்றால் அதை ஜூஸ் போட்டு தினமும் குடித்துவர எளிதாக உடலை குறைத்து கொள்ளலாம் .

https://amazeout.com/diet-இல்லாமல்-உடல்-எடை-குறைப்/

கீரைகள் :

 • உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் மிக மிக அவசியமானவை ஆகும்.
 • அதில் முக்கியமான ஒன்று தான் நம் உடலில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய கொழுப்பை கரைத்து விடுவதால் உடல் எடை போடாது.
 • அதோடு இதில் 100 கிராம் அளவு கீரையில் வெறும் 12 கலோரிகள் மட்டும் உள்ளதால் இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்துவர ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
 • கீரையை வேகவைத்து சாப்பிடுவதைக் காட்டிலும் ஜூஸ் போட்டு குடிப்பது இன்னும் அதீத பலனை கொடுக்கும்.

கலோரிகள் குறைவான உணவுகள் கேரட் :

 • கேரட்டில் மிக மிக குறைந்த ( பூஜ்ஜியம் அளவு ) கலோரிகள் தான் உள்ளது.இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகளவு உள்ளது.
 • எனவே தினமும் பச்சையாக ஒரு கேரட் சாப்பிட்டு வர பசியை குறைக்கும், அதோடு முகம் மற்றும் கண் பார்வை ஆரோக்கியமாதாகவும், பளபளவெனவும் இருக்கும்.

https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/

பழங்கள் :

 • ஆப்பிள்,ஆரஞ்சு பழங்கள் சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை குறையும்.பசியை போக்கும்.
 • பொதுவாகவே சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாகவே இருக்கும்.
 • அதனால் தினமும் எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஆரஞ்சு& ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம்.

கலோரிகள் குறைவான உணவு முட்டைக்கோஸ் :

 • முட்டைக்கோஸ் தினமும் உணவில் மதியம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
 • இதில் மிக குறைந்த அளவு கலோரிகள் தான் இருக்கிறது.அதாவது 100 கிராமில் 12 கலோரிகள் தான் உள்ளது.
 • எனவே உங்களுடைய உணவில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு உடற்பயிற்சி செய்துவர வேகமாக ஆரோக்கியமான முறையில் உடை எடையை குறைக்கலாம்.

தொப்பை குறைய இதை செஞ்சி பாருங்க

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.