கழுத்தில் உள்ள கருமை நிறம் போகவேண்டுமா ?
கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைய எளிமையான இயற்கையான வழிமுறைகள் என்ன?
கழுத்தில் உள்ள கருமை நிறம் இயற்கையான முறையை போக இந்த பதிவை முழுசா படிச்சு பாருங்க !
- பொதுவாக நம்மில் பல பேருக்கும் கழுத்து பகுதி மட்டும் கருப்பாக இருப்பது இன்றும் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
- நிறைய பேர் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அவர்கள் கழுத்து பகுதிமட்டும் எப்போதும் கருமை நிறமாக இருக்கும். அதாவது சில பேருக்கு இந்த கருமை நிறம் அவ்வளவாக தெரியாது.
- ஆனால் ஒரு சில பேருக்கு கழுத்தில் கருமை நிறம் பட்டை தீட்டியது போல பளிச்சென்று தெரியும். மேலும் அழகு என்பது வெளிப்புற தோற்றத்தை அதிகரித்து கொள்வதற்கு அல்ல.
- பொதுவாக நாம் அழகாக இருப்பது நமக்கு ஒரு நேர்மையான எண்ணத்தை உருவாக்கும். மற்றவர்களும் நம்மை மதிப்பார்கள்.
- அந்த வகையில் கழுத்தில் இருக்க கூடிய கருமை நிற பிரச்சனை தீர எளிமையான டிப்ஸ் இந்த பதிவில் பார்க்கலாம்.
கழுத்தில் உள்ள கருமை நிறம் நீங்க சில இயற்கை முறைகள் :
தேன்:
- தேன், எலுமிச்சை, சர்க்கரை இந்த 3 பொருட்களையும் சம அளவில் எடுத்து கொண்டு ஒன்றாக கலந்து கழுத்து பகுதியில் தினந்தோறும் தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து 1/2மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- இப்படி வாரத்தில் இருமுறை செய்திட நல்ல பலன் கிடைக்கும்.
https://amazeout.com/முகத்தில்-உள்ள-கருமை-நீங/
கழுத்தில் உள்ள கருமை நிறம் போக கற்றாழை:
- பொதுவாக கற்றாழைக்கு மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. அதுவும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி தரும்.
- கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து இரவு நேரத்தில் கழுத்தில் போட்டு 10 நிமிடங்கள் மசாஜ் செய்து அப்படியே தூங்க வேண்டும். பிறகு மறு நாள் காலை அதை கழுவி விடலாம்.
- இது போல் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வாரத்தில் உங்கள் கழுத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக குறையும்.
- மேலும் இந்த ஜெல்லை உங்கள் உடம்பில் இருக்கும் கைமுட்டி, கால் முட்டி போன்ற இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடா:
- பேக்கிங் சோடா என்பது அழுக்குகளை நீக்கும் திறன் கொண்டது. பேக்கிங் சோடாவில் சிறிது நீர் சேர்த்து கலக்கி அதை கழுத்தில் தடவி மசாஜ் செய்து கொஞ்ச நேரம் கழித்து ஜில் தண்ணீர் விட்டு கழுவி வர கழுத்து பகுதியில் உள்ள அழுக்குகள் இல்லாமல் இருப்பதோடு விரைவில் வெள்ளை ஆகும்.
அரிசி மாவு:
- இயற்கையாகவே அரிசிக்கு கண்ணுக்கு தெரியாத அழுக்கு மற்றும் கிருமிகள் அழிக்கும் தன்மை கொண்டது.
- எனவே ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சுத்தமான பசு பால் சேர்த்து மிக்ஸ் பண்ணி கழுத்தில் தடவி சிறுது நேரம் மசாஜ் செய்ய 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- இதை தொடர்ந்து 2 வாரம் செய்திட நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கழுத்தில் உள்ள கருமை நிறம் போக தக்காளி:
- தக்காளி மருத்துவ குணம் கொண்டது. தக்காளி பழத்தை நன்றாக கூழ்போல அரைத்து அந்த சாறை கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
https://amazeout.com/இரவு-நல்ல-தூக்கம்-வர-என்ன/
பாசி பயறு:
- பாசி பயிருக்கு இயற்கையாகவே முகத்தை பளிச்சென்று செய்து விடும்.எனவே இந்த பாசி பயிறு மாவில் பால் சேர்த்து மிக்ஸ் பண்ணி கழுத்தில் தடவி வர கருமை நிறம் விரைவில் மாறும்.