சர்க்கரை நோயாளிகள் அண்ணாச்சி பழம் சாப்பிடலாமா ?

சர்க்கரை நோயாளிகள் அண்ணாச்சி பழத்தை சாப்பிடலாமா ?

 • எல்லா பழங்களும் நமக்கு நன்மையைத்தான் தரும் என்று கண்மூடித்தனமாக சொல்லமுடியாது.
 • சில நோய்களுக்கு சில குறிப்பிட்ட பழங்கள் சாப்பிட்டு வந்தால் நோயை இன்னும் தீவிரப்படுத்தும்.
 • எனவே ஏதாவது நோய் வந்தால் அந்த நோய்க்கு ஏற்ற உகந்த பழங்களை மட்டும் தான் சாப்பிடவேண்டும்.
 • எனவே அந்த வகையில் பலரும் குலம்பிப்போய் இருப்பது சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா என்கின்ற பெரும் சந்தேகமானது இன்றுவரை இருந்து கொண்டே இருக்கிறது.

சர்க்கரை நோய்

அண்ணாச்சிப்பழம் :

 • அண்ணாச்சிப்பழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.பித்தத்தை தணிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அதிகளவில் இருக்கிறது.
 • தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள எலும்பு வலுவாக இருக்கும்.அதாவது எலும்புக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அண்ணாச்சிபழத்தில் அதிகமாக உள்ளது.
 • உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு தருகிறது.இதனால் கோரோன’வில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
 • ரத்த சம்மந்தமான நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர இதுதொடர்பான நோய்களை கட்டுக்குள் வைக்கும்.
 • வைட்டமின் பி அதிகளவில் அன்னா ச்சிபழத்தில் உள்ளதால் பெண்களுக்கு அதிகளவில் நன்மையை பயக்கக்கூடிய வகையில் உள்ளது.ஆனால் கர்ப்பிணி பெண்கள் மட்டும் இந்த பழத்தை அப்போது சாப்பிடாமல் இருப்பது நல்லது.
 • அன்னாசிப்பழம் தினமும் சாப்பிட்டு வர புற்று நோய் வராமல் தடுக்கக்கூடிய ஒரு எதிர்வினையாக நம் உடலில் செயல்படுகிறது.
 • அன்னாசிப்பழம் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.அதோடு பார்வை குறைபாடும் சரியாகும்.
 • சீரற்ற இரத்த ஓட்டம் கொண்டவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

https://amazeout.com/சர்க்கரை-நோய்-உள்ளவர்கள்/

அன்னாசிப்பழமும் சர்க்கரை நோயாளியும் :

 • சர்க்கரை நோய் வாழ்க்கையில் ஒரு முறை வந்தால் நம் வாழ்நாள் முழுவதும் நாம கவனமாக தான் இருக்க வேண்டும்.
 • இந்த சர்க்கரை நோய்க்கு வந்தாலே நம்முடைய உடலில் ஒவ்வொரு உறுப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்.
 • எனவே இதுபோன்ற பாதிப்புகள் வாராமல் இருப்பதற்கு தினந்தோறும் இயற்கையான முறையில் ஒரு சில உணவுகளை நம் உடலிற்கு எடுத்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
 • அதேபோல சர்க்கரை நோயாளிகள் தெரியாமல் கூட ஒரு சில உணவுகளை சாப்பிட கூடாது.ஏனென்றால் இது அவங்களுடை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

https://amazeout.com/தலைவலி-உடனே-தீர-இதை-செய்ய/

சர்க்கரை நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா ?

 • அந்த வகையில் அதிகளவு சத்துக்கள் கொண்ட அன்னாசிப்பழம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்று கேட்டால்,சாப்பிடலாம்.
 • ஆனால் ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது.அப்படி மட்டும் சாப்பிட்டால் தான் ஆபத்து இல்லை.
 • மற்றபடி சர்க்கரை நோயாளிகள் சாதாரணமாக சாப்பிட்டுவந்தால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

https://amazeout.com/முகத்தில்-உள்ள-கருமை-நீங/

எப்படி ? எந்த நேரத்தில் சாப்பிடலாம் ?

 • இந்த 100 கிராம் அன்னாசிப்பழத்தில் 13 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை நோயாளி இந்த பழத்தை சாப்பிடலாம்.
 • காலை உணவில் ஒரு பீஸ் அளவு அன்னாசிப்பழத்தை சாப்பிடலாம்.இதுபோல நீங்க உணவருந்தும் 3 வேலையும் கொஞ்சமாக சாப்பிடலாம்.
 • அதேபோல காலை உணவிலே அதிகளவு அன்னாசிப்பழம் சாப்பிட்டால் அடுத்த வேலையான மதியம் சாப்பிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.
 • ஏனென்றால் மிதமான அளவு கார்போஹைட்ரேட் அன்னாச்சிபழத்தில் இருந்தாலுமே ஒரே நேரத்தில் அதிகளவு பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.
 • இதனால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்து மயக்கம் கூட வரலாம்.
 • இதுவே உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 • மேலும் அன்னாசிப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் ஜிஐ அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிக்கு நன்மையை தருவதற்கு பதிலாக பாதகமான பலனை சில சமயங்களில் கொடுத்துவிடும்.
 • அதேபோல பழத்தை பீஸ் போட்டுக்கூட சாப்பிடலாம்.ஆனால் ஜூஸ் போட்டு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
  ஏனென்றால் பதப்படுத்தப்பட்ட நார்சத்தை குறைத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
 • எனவே சர்க்கரை நோயாளி அண்ணாச்சி பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதிகமாக சாப்பிடக்கூடாது.
 • அதேபோல ஒரே நேரத்தில் அதிகளவு இந்த பழத்தை சாப்பிடாம இருப்பது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
 • அதேபோல சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இந்த பழத்தை அதிகளவு சாப்பிட்டு வரலாம்.உங்களுக்கு எந்த வித பிரச்சனைகளும் வராது.

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.