சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடை குறைக்க எளிய வழி
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் எடை ஏன் அதிகரிக்கிறது
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனத்திற்கு, சாதரணமாக திடீரென உடல் எடை குறைந்தால் “சுகர்” இருக்கானு பார்க்கச்சொல்லுவாங்க.இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் தான்.G
- ஆனால்,அதுவே சர்க்கரை நோய் உள்ள நோயாளிகளுக்கு வேகமாக உடல் எடையானது அதிகரித்துக்கொண்டே இருக்கும்.என்னதான் நீங்க கடினமாக டயட் , உடற்பயிற்சி போன்றவை செய்தாலும் உடல் எடையானது குறைப்பது சற்று அதிக சிரமமாகவே இருக்கும்.
- அதாவது மற்றவர்கள் உடல் எடையை குறைப்பதை காட்டிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடை குறைப்பது மிகவும் கடினமாகும்.
சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் :
- நாம் சாப்பிடக்கூடிய உணவில் மாவுசத்தில் அதிகளவு குளுக்கோஸ் கிடைக்கிறது.இந்த குளுக்கோஸ் ரத்தத்தில் சேர்ந்து கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்கிறது.
- இன்சுலின் உடலில் உள்ள செல்களுக்கு குளுக்கோஸ்யை அனுப்புகிறது.பிறகு அந்த செல்கள் நம் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும்.
- ( Receptors ) வாங்கிகள் என்று அர்த்தம்.இந்த வாங்கிகள் மூலமாகத்தான் குளுக்கோஸ் செல்களுக்கு செல்லும். சர்க்கரை வந்தவர்களுக்கு இந்த வாங்கிக்கள் அதாவது (Receptors) வேலை செய்யாது.
- அதனால் தான் குளுக்கோஸ் செல்லுக்கு செல்லாமல் பழையபடி ரத்தத்தில் மீண்டும் கலக்கிறது.எனவே தான் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 180 மி.கி அளவுக்கு மேல் அதிகரித்தால், அது நமக்கு எனர்ஜியாக மாறாமல்,சிறுநீராக வெளியேறும்.
- இதனால் தான் ஆரம்ப காலத்தில் சர்க்கரை வந்தவர்கள் உடல் எடை வேகமாக குறைகிறது.
- பயங்கரமான உடல் எடை அதிகரிப்பு :
சர்க்கரை வந்தவர்கள் ஒரு ஆறு மாதத்திற்குள் திடீரென வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.அவங்களுக்கும் உடல் எடையை குறைகணும்னு நினைத்தாலும் அவ்வளவு எளிதாக நடப்பதில்லை.
https://amazeout.com/தலைவலி-உடனே-தீர-இதை-செய்ய/
எடை குறையாமல் இருப்பதற்கு 2 காரணம் :
- சர்க்கரை நோயாளிகள் தினந்தோரும் மாத்திரை சாப்பிடுவதால் அந்த மாத்திரையை உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய ஒரு காரணமாக இருக்கிறது.
இதனால் தான் மற்றவர்கள் உடல் எடையை குறைப்பது போல இவங்கனால எளிதாக உடல் எடையை குறைக்க முடியவில்லை. - அதோடு சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி பசியானது வந்துகொண்டே இருக்கும். இதனால் அவங்க சில நேரங்களில் நல்ல அதிகமான உணவை சாப்பிடுவாங்க,இதனாலும் அவங்க உடல் உடை குறைவது சிரமமாக உள்ளது.
https://amazeout.com/முகத்தில்-உள்ள-கருமை-நீங/
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடை குறைக்க :
- நீங்க மற்றவர்கள் போல் இல்லாமல் சற்று மாறுபட்ட முறையில் இதை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
- அதோடு சர்க்கரை அளவும் ஒரே சீராக இருக்கும்.அதாவது இதை ஃபாலோ செய்தால் “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்”.
- உடலில் உங்களுக்கு சர்க்கரை அளவும் சீராக இருக்கும்,உடல் எடையும் குறைவதால் இதய நோய்,ரத்த கொதிப்பு மூச்சி திணறல் போன்ற நோய்களும் வராது.
- வெந்தயப்பால்
- பாகற்காய் ஜூஸ்
- நெல்லிக்காய் சாறு
- வெள்ளரிக்காய் ஜூஸ்
வெந்தயப்பால் :
- தினமும் காலை எழுந்தவுடன் 200 மில்லி தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் சேர்த்து இரவே ஊற வைத்துவிட வேண்டும்.
- பிறகு காலையில் எழுந்து அந்த தண்ணீரை வெதுவெதுவென காயவைத்து குடிக்க வேண்டும்.
- இப்படி செய்தால் உடல் எடை வேகமாக குறையும்.அதோடு வெந்தயத்தில் கலோரி குறைவு,ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
பாகற்காய் ஜூஸ் :
- பாகற்காய் மிக்ஸியில் போட்டு ஜூஸ் மாறி வெறும் வயிற்றில் குடித்துட்டுவர சர்க்கரை அளவு ஒரே சீராக இருக்கும்.அதேபோல உடல் எடையும் வேகமாக குறையும்.
- ஏனென்றால் இதில் கலோரிகள் மிகமிக குறைவு.அதேபோல சீராக சர்க்கரை உள்ள சர்க்கரை நோயாளிகள் இந்த பாகற்காய் ஜூஸ் தினமும் குடித்துட்டுவர கூடாது.
- இதனால் சர்க்கரை அளவு ரொம்பவே அதிகமாக குறைந்துவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
- அளவுக்கு அதிகமாக உங்களுக்கு சர்க்கரை அளவு 350’க்கு மேல் உள்ளவர்கள் மட்டும் இந்த ஜூஸ் சாப்பிடுங்க.
நெல்லிச்சாறு :
- நெல்லிக்காய் ஜூஸ் தினமும் ஒரு சிறிய கிளாஸ் அளவில் குடித்துட்டுவர வர உடல் எடையானது வேகமாக குறைவதோடு சர்க்கரை அளவும் எப்போதும் ஒரே சீராக இருக்கும்.
- உடலில் சேரக்க்கூடிய தேவையில்லாத கொழுப்பை குறைகிறது.அதனாலே உடல் எடையும் வேகமாக குறையும்.
வெள்ளரிக்காய் :
- வெள்ளரிக்காயை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தாலோ இல்லையென்றால் புதினா அதோடு சேர்த்து அரைத்து ஜூஸ் போட்டு குடித்தால் உடல் எடை வேகமாக குறைக்கும்.உடலில் கலோரி அளவை குறைக்கும்.
- எனவே இந்த ஜூஸ் எல்லோரும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது.
அதேபோல சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடை மட்டும் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.