சுக்கு பால் நன்மைகள் என்னென்ன தெரியுமா ?

சுக்கு பால் நன்மைகள் என்னென்ன என்பது பற்றியும் ,இதை குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம் .

 • தற்போது இருக்கும் இந்த சூழலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
 • ஏனென்றால் நம்மைச்சுற்றி ஏராளமான நோய்கள் உள்ளன.இதில் ஒரு சில நோய்கள் விரைவில் குணமடையும்.
 • இன்னும் ஒரு சில நோய்கள் நாள்பட்ட நோயைக்கூட ஏற்படுத்தும்.
 • எனவே இதுபோன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சாப்பிடக்கூடிய உணவில் அதிகமாக நாம் அக்கறைக்காட்ட வேண்டும்.
 • ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவின் மூலமாக தான் நமது உடலுக்கு தேவையான நோயை எதிர்த்து போராடக்கூடிய சக்தியை தரக்கூடும் என்பதால் தான் ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும்.
 • அந்தவகையில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக உகந்ததாகவும், சிறந்ததாகவும் இருப்பது சுக்கு பால்.

https://amazeout.com/முடிவளர-சாப்பிடவேண்டிய-உ/

சுக்கு பால் நன்மைகள் :

 • ஒரு மனிதன் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின்,கனிமச்சத்துக்கள்,புரோட்டின் மற்றும் ஆண்டி-பாக்டீரியல் போன்றவை நமக்கு அவசியம் தேவைப்படுகிறது.
 • இந்த எல்லாசத்துகளையும் ஒரே ஒரு உணவின் மூலமாக முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்.
 • அதுதான் சுக்கு பால்.
 • சுக்கு பாலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளது.
 • உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைக்கும் மருந்தாக இந்த சுக்கு பால் உள்ளது.

சுக்கு பால் நன்மைகள்

சுக்கு பால் நன்மைகள்-காய்ச்சல் குணமடைய :

 • சுக்கு என்பது என்னவென்றால் சமையலுக்கு பயன்படுத்தும்  இஞ்சியை  காயவைத்து ,அதில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் இருப்பதுதான் சுக்கு.
 • இந்த சுக்கு பொடி செய்து 1 டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு சுக்கு பொடி கலந்து காய்ச்சலின் போது குடித்துவந்தால் உடனடியாக காய்ச்சல் குணமடையும்.
 • அதுவும்,காய்ச்சல் வந்த முதல் நாளே இப்படி சுக்கு பால் குடித்தால் உடனடியாக காய்ச்சல் குணமடையும்.

https://amazeout.com/கலோரிகள்-குறைவான-உணவுகள்/

சுக்கு பால் நன்மைகள் – சளியை குணமாக்கும் :

 • தற்போது கொரோன பரவும் இந்த காலக்கட்டத்தில் சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது சவலானதாகவே உள்ளது.
 • எனவே அப்படிப்பட்ட சளியை போக்கக்கூடிய ஒரு அருமருந்தாகவே சுக்கு இருக்கிறது.
 • பாலில் அரை ஸ்பூன் அளவு சுக்கு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குடித்துவந்தால் அடுத்த ஒரு நாளிலே சளியானது முழுமையாக குணமடையும்.
 • அதேபோல தொண்டையில் பாக்டீரியாவால் ஏற்பட்ட தொண்டை புண் போன்றவையும் குணமாகும்.

வயிற்றுவலியை போக்க சுக்கு :

 • மலச்சிக்கல் ,செரிமான பிரச்சனை மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்களும் 1 ஸ்பூன் சுக்குவுடன் சேர்த்து 1 கிளாஸ் பாலை கலந்து குடித்துவர இதுபோன்ற பிரச்சனை நீங்கும்.

நச்சுகள் நீங்க :

 • உடலில் சேரக்கூடிய தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றவும் சுக்குப்பால் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

https://amazeout.com/fruits-avoided-by-sugar-patients/

சுக்கு பால் நன்மைகள் – சிறுநீர்தொற்று தடுக்க :

 • சில சமயங்களில் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் அப்படியே தங்கிவிடுவதால் எரிச்சல் போன்ற சிறுநீர் தொற்றானது ஏற்படும்.
 • அப்போது காய்ச்சிய பாலில் சுக்கு மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து ஆரிய பிறகு குடித்து வந்தால் சிறுநீர் தொற்று தொடர்பான பிரச்சனை இனி வராது.

உடல் எடையை குறைக்க :

 • வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது சுக்கு பொடி சேர்த்து கலந்து குடித்துவந்தால் உடலில் சேரக்கூடிய கொழுப்புகள் அனைத்தும் கரையும்.
 • இதனால் தொப்பை போடாது.உடல் எடையும் குறையும்.

எனவே நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு சுக்கு பால் பல்வேறு வகையில் நமக்கு நன்மையை செய்கிறது.

இரவு நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.