தலைமுடி வளர இதுமட்டும் செய்தால் போதும் :

தலைமுடி வளர எளிய வழிகள் :

தலைமுடி வளர என்ன செய்யணும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .

 • பலருக்கும் பொதுவாக உள்ள பிரச்சனை தான் தலைமுடி கொட்டுவது.தலைமுடி கொட்டாமல் அடர்த்தியாக வளர செய்வதற்கு பல இயற்கையான வழிமுறைகளும் உள்ளது.
 • முடியானது வலுவாக இல்லாமல் இருப்பதாலும்,உடலில் ஏற்படக்கூடிய திடீர் ஹார்மோன் மாற்றத்தாலும் தான் முடியானது அதிகளவில் கொட்டுகிறது.
 • இந்த பிரச்சனைகளை சரிசெய்ய எளிமையாக நம்முடைய வீடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு முடி வளர்ச்சியை பெறலாம்.

https://amazeout.com/முகம்-வெள்ளையாக/

தலைமுடி வளர மருத்துவர் ஆலோசனை :

 • முடி கொட்டுவது என்பது அவ்வளவு ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை.
 • ஏனென்றால் முடியானது கொட்டுவதும்,வளர்வதும் தான் சுழற்சியான முறையாகும்.
 • அதாவது ஒரு நாளைக்கு 90-லிருந்து 100 முடி அளவுக்கு உதிரலாம்.
 • ஆனால் அதேபோல ஒரு நாளைக்கு 100-120 முடி தலையில் புதிதாக வளர ஆரம்பமாகும்.
 • எனவே தான் இது ஒரு சுழற்சி முறையாகும்.
 • இந்த கொஞ்ச முடியும் கொட்டாமல் இருப்பதற்கு மனஅழுத்தம் இல்லாமலும்,உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொண்டாலும் முடி கொட்டாது.
 • எனவே ,இதையும் தாண்டி ஒரு நாளைக்கு 100’க்கு மேல் முடி கொட்டியும் மீண்டும் முடி வளராமல் இருக்கும் போது நாம் மருத்துவரை அணுக வேண்டும்.
 • ஏனென்றால் இந்த முடி உதிர்வு தொடர்ந்துக்கொண்டே சென்றால் வலுக்கைக்கூட ஏற்படலாம்.
 • எனவே இயற்கையான முறையில் முடிக்கு தேவையான வைட்டமின் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சில பொருட்களை கொண்டு இப்படி செய்து வந்தால் முடி உதிர்வை தடுத்து முடி வளரும்.

 

தலைமுடி வளர வெங்காய மசாஜ்:

 • தலைமுடி இல்லாத சொட்டையாக இருக்கக்கூடிய பகுதியில் வெங்காயத்தின் தோல் நீக்கி,அந்த வெங்காயத்தை மசாஜ் செய்துவந்தால் முடியானது வளர ஆரம்பமாகும்.
 • 2 அல்லது 3 வெங்காயத்தை தோல் நீக்கி மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து அந்த சாற்றை எடுத்து தலைமுடியில் தடவி வெயில்காலமாக இருந்தால் 20 நிமிடமும் ,குளிர்காலத்தில் 10 நிமிடமும் ஊற விட்டு பிறகு தலைக்கு குளித்து வந்தால் முடியானது கொட்டாமல் வளரும்.
 • தலையில் முடி இல்லாமல் இருந்த பல இடங்களில் முடி புதிதாக வரக்கூடும்.

https://amazeout.com/கலோரிகள்-குறைவான-உணவுகள்/

தலைமுடி வளர கற்றாழை :

 • நல்ல கற்றாழையை அதாவது சோற்று கற்றாழையை தினமும் ஒரு சிறிதளவு பீஸ் சாப்பிட்டு வந்தால் உடலிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
 • ஹார்மோன் மாற்றத்தை சரிவிகித்தப்படுத்தும்.இதனால் முடியும் கொட்டாது.
 • அதோடு வாரம் ஒரு முறையாவது கற்றாழை கொண்டு குளிக்கவேண்டும்.
 • அதாவது கற்றாழை , செம்பருத்தி இலை மற்றும் இரவே ஊறவைத்த வெந்தயம் இதையெல்லாம் சேர்த்து அரைத்து அதை தலை முடியில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து பிறகு 10 நிமிடம் ஊறவைத்து குளித்தால் முடி வளரும்.
 • இதை தலையில் தடவுவதற்கு என்று ஒரு விதிமுறை உள்ளது.
 • அதாவது தலையில் எண்ணெய் இல்லாமல் வறட்சியாக இருக்கக்கூடிய நேரத்தில் இதை தடவினால் தான் முடி கொட்டாமல் வளரும்.

தலைமுடி வளர முட்டை :

 • முட்டையில் உள்ள வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து அதை முடியில் தடவி மசாஜ் செய்து ஒரு 15 நிமிடம் ஊறவைத்து குளித்தால் முடியானது மிருதுவாகவும் இருக்கும்.
 • அதோடு மயிர்கால்கள் ஏதாவது சேதமடைந்தாலும் முடி வளராமல் உதிரும்.
 • ஆனால் இந்த வெள்ளைக்கரு தேய்த்து வந்தால் சேதமடைந்த மயிர்கால்களை சரிப்படுத்தும்,அதோடு முடியை அழகாக வைத்து கொள்ளும்.
 • அதாவது கண்டீஷனர் போட்டது போல முடியை வைத்துக்கொள்ளும்.

https://amazeout.com/fruits-avoided-by-sugar-patients/

பீர் வாஷ் :

 • மாதம் ஒரு முறை 1 கிளாஸ் அளவுக்கு பீரை எடுத்து தலைமுடியில் உள்ள ஸ்கால்ப் பகுதியில் ஊற்றி மசாஜ் செய்துவர முடியானது வளரும்.

தேங்காய் எண்ணெய் :

 • தலைக்கு குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பாக ( 30 min before ) தலைக்கு தூய தேங்காய் எண்ணெய் தேய்த்து அதன் பின் குளித்தால் உடலில் உள்ள உஷ்ணம் குறைவதால் முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்.
 • எனவே இந்த முறையில் வாரத்தில் 2 முறை இப்படி குளித்து வந்தால் முடி வளருவதை பார்க்கமுடியும்.

சாதாரணமாக வாரத்திற்கு 3 முறை தலைக்கு குளித்து வருவது அழுக்கை சேர்க்காமல் முடி வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

 

முடிஉதிர்வு தடுக்க எளிமையான வழிமுறைகள் :

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.