தொப்பை குறைய இதை செஞ்சி பாருங்க
உடல் எடை குறைய கொழுப்பை கட்டுபடுத்தும் உணவுகள் :
தொப்பை குறைய ஒரு சில எளிய வழிகள் :
- நம் உடலில் சேரக்கூடிய தேவையில்லாத கொழுப்பின் காரணமாகத்தான் உடல் எடையானது அதிகரிக்கிறது. கொழுப்பு என்பது மனித உடலுக்கு அவசியமான ஒரு மூலப்பொருள் ஆகும்.
- ஏனென்றால் இந்த கொழுப்புதான் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான செல்களை உருவாக்கும் அதோடு பல ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது.
- இதற்காக நம்முடைய உடலுக்கு கொழுப்பானது தேவைப்படுகிறது.ஆனால் அதே சமயம் “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழிக்கு ஏற்ப உடலில் அதிகமான கொழுப்புகள் சேரும்போது தான் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் உடல் எடை அதிகரிப்பு,இதய நோய்,கர்ப்பப்பை பிரச்சனை,குழந்தை பிறப்பதில் சிரமம்,நாள்பட்ட நோய் என பல்வேறு பிரச்சனைகளானது வரக்கூடும்.
- எனவே நம்முடைய உடலில் தீங்கை விளைவிக்கக்கூடிய கொழுப்பை குறைக்க எளிமையாக தினமும் இந்த உணவை மட்டும் சாப்பிட்டு வாங்க.
- குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் கொழுப்பை குறைக்க வேண்டும்.அதற்கு இந்த உணவை மட்டும் சாப்பிடுங்க .
- இந்த உணவில் கலோரிகள் குறைவாக இருக்கும்.இது உங்களுடைய உடல் எடை குறைக்க உதவியாக இருக்கும்.
தொப்பை குறைய கொழுப்பை குறைக்கும் உணவுகள்
- வெந்தயம்
- ஓட்ஸ்
- பூண்டு
- எலுமிச்சை
- ஆரஞ்சி,ஆப்பிள்
வெந்தயம் :
- இரவு ஒரு கிளாஸ் தண்ணியில் ஒரு ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் சேர்த்து இரவில் ஊறவிட வேண்டும்.
- பிறகு காலையில் வெறும் வயிற்றில் எழுந்து அந்த ஊறவைத்த தண்ணீரை காயவைத்து ( வெதுவெதுப்பான அளவுக்கு ) அந்த தண்ணீரை குடித்து வர உடலில் இருக்கக்கூடிய கேட்ட கொழுப்புகள் அனைத்தும் குறையும்.
- தொப்பை போடாது. உடல் எடையும் வேகமாக குறையும்.
- உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒரு மூலிகையாகவும் இந்த வெந்தயம் இருக்கிறது.இதில் அதிகளவு நார்ச்சத்து இருக்கிறது.அதேபோல இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.
ஓட்ஸ் கஞ்சி :
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பு என்று சொல்லக்கூடிய (L.D.L) அளவை கட்டுப்படுத்தகூடிய ஆற்றலானது இந்த ஓட்ஸ்’க்கு இருக்கிறது.
- ஓட்ஸ் கஞ்சி வைப்பது எப்படி என்றால் 1 கப் ஓட்ஸ், 2 கப் தண்ணீர், 1கப் பால் இதுதான் தேவையான பொருள்.
- முதலில் அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவைத்து அதன் பிறகு தண்ணீர் ஊற்றி ஓட்ஸ் தானியம் சேர்த்து கலக்க வேண்டும்.
- பிறகு ஓட்ஸ் தானியம் வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து எறக்கிவிட வேண்டும். இதை சாப்பிட்டுவர உடலில் உள்ள (L.D.L) கெட்ட கொழுப்பை குறைக்கும்.
தொப்பை குறைய எலுமிச்சை :
- எலுமிச்சை சாறுடன் நீர் சேர்த்து குடித்துட்டுவர உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் அனைத்தும் குறையும்.
- இதில் உள்ள சிட்ரிக் அமிலம் கொழுப்பை குறைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.
https://amazeout.com/7-நாளில்-உடல்-எடை-குறைய-எளி/
ஆரஞ்சி,ஆப்பிள் :
- வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டுவர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் முற்றிலும் குறையும்.
- எனவே அந்த வகையில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழமான ஆப்பிள் மற்றும் ஆரஞ்சில் அதிகமான சத்துக்கள் நிறைந்து உள்ளது.
- அதுமட்டும் இல்லாமல் இது உங்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியனதாக இருக்கும்.
- தினமும் 1 ஆப்பிள்,1 ஆரஞ்சி சாப்பிட்டு வர எந்த வித நோயும் வராமல் ஆரோக்கியமாக இருக்கும்.
தொப்பை குறைய பூண்டு :
- பாலில் பூண்டு கலந்து குடித்திடுவர உங்க வயிற்றில் தேவையில்லாமல் படியக்கூடிய கொழுப்பை குறைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- தொப்பை போடாது.
எனவே இந்த பொருட்களை உணவில் சேர்த்துவந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.உடல் எடையும் மிக விரைவில் குறையும்.