பளபளப்பான சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

பளபளப்பான சருமம் கிடைக்க இதை மறக்காம செய்துடுங்க..!

பளபளப்பான சருமம் கிடைக்க இந்த பதிவை படித்து பாருங்களே !

 • ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகளவில் வெள்ளையாகவும், முகம் பொலிவுடனும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
 • இதற்காக மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பல கிரீம்’களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
 • அந்த கிரீம் ஒரு சில நாட்களில் நமக்கு மாற்றத்தை தந்தாலும் அது நமக்கு நிரந்தரமாக இருப்பதில்லை. அதோடு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
 • நம்முடைய வாழ்க்கையில் தினந்தோறுமே ஒரு சில சின்னசின்ன விஷயங்களை ஃபாலோ பண்ணும் போது இயற்கையாக நிரந்தரமான முகப்பொழிவை உங்களுக்கு கொடுக்கும்.
 • செயற்கையை காட்டிலும் இயற்கையாக ஒரு சில விஷயங்கள் செய்யும் போது அதனுடைய பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும் அது நிரந்தரமானதாக இருக்கக்கூடும்.
 • எந்த ஒரு பக்க விளைவுகளும் வராது என்பது தான் முக்கியமான விஷயமாகும்.
 • மேலும்,மார்கெட்டில் கிடைக்கக்கூடிய பல தவறான பொருட்களை வாங்கி முகத்தில் தடவுவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது.அதிகபட்சமாக சொல்லவேண்டும் என்றால் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
 • பலரும் அவர்களுக்கே தெரியாமல் முகஅழகிற்காக உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகளை அறியாமையின் மூலமாக ஏற்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/

ஈரப்பதத்துடன் சருமம் :

 • நாம் வெளியில் சென்று வருவதால் முகத்தில் பல்வேறு தேவையில்லாத பாக்டீரியா மற்றும் திசுக்கள் அனைத்தும் தோளில் படிய ஆரம்பிக்கும்.
 • இதனால் நம்முடைய தோலானது டேமேஜ் ஆகி தோலை கருப்படைய செய்யும். சுருக்கம் போன்றவையும் ஏற்படும்.
 • எனவே தான் முகத்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு முறையாவது கழுவ வேண்டும்.இப்படி ( facewash ) செய்வதால் முகமும் ஈரப்பதத்துடன் சருமம் மிருதுவாகவும் இருக்கும்.
 • அதோடு முகத்தில் தேவையில்லாமல் முகப்பருக்கள் போன்றவை வராது.

பளபளப்பான சருமம்

பளபளப்பான சருமம் கிடைக்க தண்ணீரும் முகப்பொலிவும் :

 • “நீரின்றி அமையாது உலகு” என்று சொல்வதற்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் உடல் ஆரோக்கியமே இல்லை என்று சொன்னால் மிகையாகாது.
 • உடல் ஆரோக்கியத்தில் தண்ணீர் பல வகைகளில் நமக்கு நன்மையை அள்ளி தருகிறது.அந்த வகையில் தான் முகப்பொலிவிற்கு தண்ணீர் மிகமிக முக்கிய அவசியமாகும்.
 • ஏனென்றால் நம்முடைய உடலில் 70% அளவு நீர் இருப்பதால்,நாம் தினந்தோறும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உங்களின் சருமமானது ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.
 • இதனால் முகத்தில் எண்ணெய் வடியாது (oily face).முகப்பரு வராது. முக தோலும் நிறம் அதிகரிக்கும் அதாவது விரைவில் வெள்ளையாகலாம்.

https://amazeout.com/இரவு-நல்ல-தூக்கம்-வர-என்ன/

பளபளப்பான சருமம் கிடைக்க ஊட்டச்சத்து உணவு :

 • தினமும் வெறும் வயிற்றில் அரை கிளாஸ் அளவில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர விரைவில் சரும நிறமானது மாற ஆரம்பமாகும்.
 • பீட்ரூட் ரத்தத்தை சுத்தப்படுத்தகூடிய ஒரு அற்புதமான காரணியாகும். இதனால் கெட்ட ரத்தம் வெளியேறுவதால் முகமானது பளபளவென பொலிவோடும் இருக்கும்.
 • 5 செர்ரி பழம் எடுத்து மீக்சியில் போட்டு அரைத்து அதை முகத்தில் தடவி வர முகமானது அதீத பொலிவுடன் நம்முடைய தோலும், செர்ரி பழம் நிறத்தில் உங்களுடைய கண்ணமானது(chin) மாறக்கூடும்.

https://amazeout.com/diet-இல்லாமல்-உடல்-எடை-குறைப்/

புன்னகை :

 • என்னதான் தோலின் நிறம் வெள்ளையோ கருப்போ புன்னகை மட்டும் முகத்தில் இருந்தால் பெண்களுக்கு இதுவே ஒரு தனி அழகாகும்.
 • எனவே அந்த வகையில் நம்முடைய சிரிப்பு தோலின் நிறத்தை மாற்றும். அதாவது, நாம் சிரிக்கும் போது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.இதனால் சருமமானது ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜனை பெறுகிறது.
 • அதோடு மனக்கவலை நீங்கி சந்தோஷமாக இருப்பதே முகத்தையும் உள்ளத்தையும் பொலிவாக வைத்து இருக்கக்கூடிய ரகசிய வழியாகும் எனவே இப்படி தினந்தோறும் நம்முடைய வாழ்க்கையில் இந்த சின்ன விஷயங்களை ஃபாலோ செய்தாலே இயற்கையான முறையில் நிரந்தரமாக வெள்ளையான சருமத்தை பெறலாம்.

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.