முகத்தில் கருமை நீங்க குங்குமப்பூ ஒன்றே போதுமாம்..!
முகத்தில் கருமை நீங்க என்ன செய்யலாம் ?
முகத்தில் கருமை நீங்க என்ன செய்யலாம் என்பது பற்றிய அருமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .
- கருப்பாக இருப்பதை காட்டிலும் வெள்ளையாக முகம் பளிச்சென்று இருப்பதைத்தான் இன்று பலரும் விரும்புவீர்கள்.
- என்னதான் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று பழமொழி சொன்னாலும் பலருடைய மனதிலும் ஒரு சின்ன ஓரமாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள்.
- இன்னொரு எதார்த்தமான உண்மை என்னவென்றால் இயற்கையான நிறத்தை நம்மால் மாற்ற முடியாது.
- ஆனால் ,அதுவே வெயில் மற்றும் சரும பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் உடலானது ஒரு நிறத்திலும்( வெள்ளை யாகவும் ),முகமானது மற்றோரு நிறத்திலும்( கருப்பாகவும் ) இருப்பார்கள்.
- அப்படி இருபவர்வர்கள் நிச்சயமாக அவர்களுடைய உடல் நிறத்தையே முழுமையாக முகத்திலும் பெறலாம்.
- எனவே ஒட்டுமொத்த சரும நிறத்தையும் ஒரே மாதிரியாக ரொம்ப எளிமையாக மாற்றலாம்.
குங்குமப்பூ :
- குங்குமப்பூ நிறத்தை கொடுக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.
கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்றும் சொல்வார்கள். - இதில் இரும்பு சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்’ம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இதனால் குழந்தையின் நிறத்தை பெறுவதோடு மட்டுமில்லால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
- எனவே கர்ப்பகாலத்தில் இதை அளவோடு சாப்பிடலாம்.
- மேலும்,இயற்கையான நிறத்தை மீண்டும் சருமம் முழுக்க பெறுவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- அதாவது முகம் கருப்பாகவும்,உடல் அதை விட சற்று நிறம் அதிகரித்து வெள்ளையாகவும் இருந்தால் உடனடியாக உடல் மற்றும் உங்க சருமத்தையும் ஒரே நிறமாக அதாவது வெள்ளையாக மாற்றும் சக்தி இந்த குங்குமப்பூவிற்கு இருக்கிறது.
- குங்குமப்பூவில் நிறத்தை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மையானது உள்ளது.
https://amazeout.com/முகத்தில்-நிறம்-அதிகரிக்/
முகத்தில் கருமை நீங்க குங்குமப்பூ மற்றும் தேன் :
- முதலில் ஒரு கரண்டி அளவுக்கு பாலை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக காய்ச்சி அதில் 4 பிஞ்ச் குங்குமப்பூவை சேர்த்து கலந்து 1மணி நேரம் ஊறவிட்ட பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து முகத்தில் தடவி 3 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடம் பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பழைய நிறத்தை பெரும்.
- அதாவது நீங்க பிறந்த போது உங்களுடைய இயற்கையான சரும நிறத்தை பெறலாம்.
- இதை வாரம் 3 முறை கட்டாயம் செய்துட்டு வர ஒரு வாரத்திலே நல்ல மாற்றங்கள் முகத்தில் ஏற்படுவதை பார்க்கலாம்.
- அதேபோல முகம் வெள்ளையாக இருந்தும் உடல் பகுதி கருமையாக இருப்பவர்களும் இதை செய்யலாம்.
https://amazeout.com/முகம்-வெள்ளையாக/
முகத்தில் கருமை நீங்க குங்குமப்பூப்பால் :
- குங்குமப்பூ விலையானது சற்று அதிகம் என்று சொன்னாலும், அதனுடைய பயனும் அதிகமாக உள்ளது.
- அதாவது, சருமத்திற்கு பொலிவை தருவதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டசத்துகள் அவசியம் தேவை.
- அதை குங்குமப்பூ மற்றும் பாதாம் மூலமாக நாம் பெறலாம்.
- இரவே 5 பாதாமை எடுத்து ஊறவைத்து காலையில் அதன் தோலை நீக்கி மிக்சியில் போட்டு அரைத்து பிறகு பாலை காய்ச்சி எடுத்து அதில் சிறிது அதாவது ஒரு 3 பஞ்ச் குங்குமப்பூ எடுத்து அதில் போட்டு,அதோடு பாதாமையும் சேர்த்து கலந்து காலையில் குடித்து வர மங்கிப்போன நிறத்தை புதுப்பிக்கலாம்.
- அதாவது முகமானது பொலிவுடன் பளபளவென இருக்கும்.
- இதை தினமும் குடித்து வர உடல் ஆரோக்கியத்திற்கும் சரி,முக அழகிற்கும் சரி பொலிவை கொடுக்கும்.
- உடல் பருமனாக இருப்பவர்கள் மட்டும் பாதாமை குறைந்த எண்ணிகையில் போட்டு குடித்தால் உடல் எடையும் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.
எனவே,இதை மட்டும் செய்து வந்தால் நிச்சயமாக உங்க உடல் நிறத்தையே உங்க முகத்திலும் பெறலாம்.அதோடு முழுமையான ஒரே மாதிரியான சரும நிறத்தையும் பெறலாம்.