முகத்தில் வறட்சி நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

முகத்தில் வறட்சி நீங்க என்ன செய்ய வேண்டும்

மழைக்காலங்களில் முகத்தில் வறட்சி நீங்கி சருமத்தை பளபளப்பாக பராமரிக்கும் எளிய முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 • கோடைக்காலத்தை காட்டிலும் மழைக்காலம் எல்லோருக்கும் பிடித்து இருந்தாலும், சரும அழகு என்று பார்த்தால் மழை காலமானது உகந்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
 • ஏனென்றால் மழைக்காலத்தில் சருமமானது வறண்டு காணப்படும்.
 • சருமம் மிருதுவாக இல்லாமல் சொரசொரவென மாறி முகத்தின் அழகையே கெடுக்கும்அதுமட்டும் இல்லாமல்,உதடுகளில் தோல் வெடிப்பானது ஏற்படும்.
 • பாதங்களிலும் தோல் வெடிப்பானது ஏற்படும்.

https://amazeout.com/முகம்-வெள்ளையாக/

மழை காலத்தில் சரும அழகும் உணவு முறைகளும் :

 • மழைக்காலம் வந்தாலே முகமானது வறண்டு போகாமல் மிருதுவாக பளபளவென இருக்க பல கிரீம்’களை கூட வாங்கி முகத்தில் அப்ளை பண்ணாலும் ஒரு நல்ல மாற்றமானது ஏற்படாது.
 • ஏனென்றால் மழை காலங்களில் முகத்தில் மாற்றம் ஏற்படாமல் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள கட்டாயம் உங்க உணவில் இதையெல்லாம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

முகத்தில் வறட்சி நீங்க சாப்பிடவேண்டிய பழங்கள் :

 • மழைக்காலத்தில் நாம் தினந்தோறும் ஆப்பிள்,ஆரஞ்சி,திராட்ச்சை,ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்டுவர முகமானது வறண்ட சருமத்தை பெறாமல்,முகமானது பொலிவுடன் இருக்கக்கூடும்.
 • ஏனென்றால் பழங்களில் உயர் ஆக்சினேற்றம் இருப்பதால் முகத்தில் வறட்சி தன்மையை போக்கக்கூடிய வகையில் இருக்கக்கூடும்.
 • அதோடு ஆன்டி- ஆக்சிடன் தீவிர செயல்பாடுகளை தடுப்பதன் காரணமாகவும் சரும வறட்சியை குறைக்கும்.

https://amazeout.com/கழுத்தில்-உள்ள-கருமை-நிற/

முகத்தில் வறட்சி நீங்க மழைக்காலங்களில் நீரும் முகப்பொலிவும் :

 • நம்முடைய உடல் தோலானது நீரால் ஆனது.அதனால் தான் நீரேற்றம் இல்லாதப்போது முக சருமமானது வறண்டு காணப்படும்.
 • அதனால் உடலை நாம் எப்போதும் நீரேற்றமாக வைக்கவேண்டியது மிகமிக அவசியமாகும்.
  சாதரணமாக மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் தாகமே எடுக்காது.
 • அதனால் தண்ணீர் மற்ற காலங்களில் காட்டிலும் மழைக்காலங்களில் குறைவாக குடிப்போம் .
 • அதனால் தான் உடலில் நீரேற்றமும் குறைவாக இருப்பதால் தான் சருமமானது வறண்டு அழகிழந்து காணப்படுது.
 • எனவே தினமும் 10 -12 கிளாஸ் தண்ணீர் தினமும் குடித்து வர உடல் ஆரோக்கியத்திற்கும் சரி,முகப்பொலிவிற்கும் சரி மிக ஏற்றதாக இருக்கும்.

முகத்தில் வறட்சி நீங்க

முகத்தில் வறட்சி நீங்க மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவு :

 • மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக சூடாக சாப்பிட எல்லோருக்கும் பிடிக்கும்.
 • அதனால் வறுத்த மற்றும் எண்ணையில் செய்த பஜ்ஜி,போண்டா,சம்ஷா சாப்பிடுவதால் முகமானது இன்னும் பல பாதிப்புகளை சந்தித்து,சருமம் வறண்டு,முகத்தில் பருக்கள் ஏற்பட்டு பின்பு முகமே கருமையாக மாறும்.
 • முகத்தில் எண்ணையும் வடிய ஆரம்பமாகும்.எனவே முடிந்தளவு எண்ணையில் பொரித்த உணவுகளை மழைக்காலங்களில் சாப்பிட வேண்டாம்.

விதைகளும் சரும அழகும் :

 • ஆளி விதைகள்,பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் தூக்கி போடாமல் அதை சாப்பிட்டு வந்தால் முகமும் பொலிவு பெறும்,அதோடு முகப்பருக்கள் வராது.
 • உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
 • இதில் சரும அழகிற்கான தேவையான விட்டமின்கள் சத்து நிறைந்துள்ளது.

பப்பாளி பழமும் இயற்கை அழகும் :

 • பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தை சுத்தப்படுத்துவதால் ,முகமானது பொலிவுடன் அழகுகாகவும் இருக்கும்.
 • இந்த பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து அதை முகத்தில் தடவி 10 நிமிடம் பிறகு முகத்தை கழுவவேண்டும்.
 • இது முகத்தில் ஏற்படும் வறட்சியை போக்கக்கூடிய வகையில் பயனுள்ளதாய் இருக்கும்.

எனவே இந்த மழைக்காலங்களில் இந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் முகமும் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்

பளபளப்பான சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.