முகம் பளிச்சென்று மாற மற்றும் பருக்கள் நீங்க என்ன செய்யலாம் ?

முகத்தில் உள்ள கருமை மற்றும் பருக்கள் நீங்க :

முகம் பளிச்சென்று மாற என்ன செய்யாலாம் என்பது பற்றிய பயனுள்ள தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

 • முகம் அழகாக இருக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை.
 • எல்லோரும் முகத்தை பொலிவுடன் பருக்கள் இல்லாமல் பளிச்சென்று வைத்து கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள்.
 • இதற்காக பலரும் அழகு நிலையத்திற்கு சென்று முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளை போக்கிக்கொள்ள செயற்கையான கிரீம் மற்றும் ப்ளீச் பேசியல் போன்றவையும் செய்து வருகிறார்கள்.
 • இதனால் அப்போது அதாவது 2 அல்லது 3 நாட்கள் மாற்றத்தை தந்தாலும் பிறகு மீண்டும் முன்பை காட்டிலும் மோசமான சருமத்தை சில பக்க விளைவுகளுடன் நாம் பெறுகிறோம்.
 • எனவே நிரந்தரமாக முகத்தில் படிந்துள்ள கருமை திட்டுகள் மற்றும் பருக்கள் நீங்கி முகத்தை பொலிவுடன் 15 நாளில் மாற்றலாம்.

முகம் பளிச்சென்று மாற

முகம் பளிச்சென்று மாற எலுமிச்சை :

 • எலுமிச்சை பழத்தில் ” வைட்டமின் சி ” சத்து உள்ளதால் முகத்தை பொலிவுடன் வைத்து கொள்வதற்கான ஊட்டச்சத்தை தருகிறது.
 • எனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக பிளந்து அதில் உள்ள சாறை எடுத்து கொள்ளவேண்டும்.
 • பிறகு அந்த சாறை ஒரு காட்டன் துணியில் நினைத்து முகத்தில் தடவி உங்க கைகளால் 2 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடம் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கருமை நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.
 • இதை தினமும் செய்ய வேண்டாம்.
 • ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.
 • வாரத்திற்கு 3 முறை மட்டும் செய்தால் போதுமானது.

https://amazeout.com/முகத்தில்-நிறம்-அதிகரிக்/

முகம் பளிச்சென்று மாற பால் :

 • முகத்தில் நிறத்தை கொடுக்கக்கூடிய சத்து பாலில் அதிகளவு உள்ளது என்பதால் 2 ஸ்பூன் பாலில் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூளை சேர்த்து கலக்கி முகத்தில் தடவனும்.
 • முகத்தில் கருமை உள்ள பகுதியில் உங்க கையை கொண்டு வட்டமாக மசாஜ் செய்து 20 நிமிடம் பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவ முகமானது கருமை திட்டுகள் குறைந்து முகமானது  புது பொலிவுடன் இருக்கும்.
 • இதை வாரம் 4 முறை செய்து வரலாம்.
 • அதுவும் இரவு நேரத்தில் செய்வது நல்ல அதிகமான பலனை தரும்.
 • அதாவது தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்பாக இப்படி செய்யலாம்.

முகம் பளிச்சென்று மாற வெள்ளரிக்காய் :

 • வெள்ளரிக்காய் எடுத்து சிறுத்துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைத்து அதை வடிகட்டி அதில் வரக்கூடிய சாரை எடுத்து முகத்தில் தடவி வர முகத்தில் கருமை திட்டு படியாது.
 • அதேபோல முகபருவும் உங்களுக்கு வராது.
 • இதை 15 நிமிடம் வரை முகத்தில் வைத்து இருந்தால் போதும்,பிறகு முகத்தை கழுவலாம்.

https://amazeout.com/கழுத்தில்-உள்ள-கருமை-நிற/

சுடுதண்ணீர் :

 • ஆவி பிடிப்பது எல்லோருக்கும் தெரியும்.
 • கொரோன காலத்தில் பலரும் செய்து இருப்பீர்கள்.
 • அதாவது தண்ணீரை கொதிக்க காயவைத்து கொள்ள வேண்டும்.
 • பிறகு அந்த சுடுதண்ணீரை முகத்திற்கு நேராக வைத்து கொண்டு நமக்கு மேல ஒரு பெட்ஷீட் போட்டு போர்த்தி ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியே வரும்.
 • அதோடு சளி பிடிக்காது மற்றும் தலையில் நீர் கோர்க்காமல் பார்த்து கொள்ளும்.
 • முக்கியமாக முகத்தில் இறந்த செல்கள் இருப்பதால் தான் முகமானது கலையாக இல்லாமல் பொலிவிழந்து கருமையாகவும்,பருக்களும் ஏற்படுது.
 • எனவே அப்படிப்பட்ட இறந்த செல்களை வெளியேற்ற ஆவி பிடிப்பது சிறந்த ஒரு விஷயமாகும்.
 • வாரத்திற்கு 2 முறை இல்லையென்றால் 1 முறையாவது இதை செய்துட்டு வரலாம்.
 • அதேபோல அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவி வந்தாலும் ,முகத்தில் பருக்கள் ஏற்படாது.

எனவே மறக்காம இதை செய்துவந்தால் முகம் 15 நாட்களுக்கு உள்ளே மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.

7 நாட்களில் முகம் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும் ?

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.