7 நாட்களில் முகம் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும் ?

7 நாட்களில் முகம் வெள்ளையாக மாற இதை மறக்காம செய்துடுங்க :

முகம் வெள்ளையாக இயற்கையான சில வழி முறைகள்

 • நம்மில் பலரும் அதிகமாக விரும்புவது வெள்ளையான சருமத்தைத் தான்.
  என்னதான் நிறம் முக்கியமில்லை என்று பேசுனாலும் ஒருவரை பார்த்தவுடனே நாம் முதலில் ஈர்க்கப்படுவது சரும நிறம் மற்றும் புன்னகை தான்.
 • எனவே தான் பலரும் சரும நிறத்தை ( வெள்ளையான நிறத்தை ) பெறுவதற்கு பல விஷயங்களை முக்கியமாக செயற்கையாக மார்க்கெட்டில் கிடைக்கும் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள்.
 • முதல் ஆறு மாதத்திற்கு அந்த கிரீம் நல்ல மாற்றத்தை தந்தாலும் பிறகு தான் பல பக்கவிளைவுகளை தந்து முன்பு இருந்த உங்க சரும நிறத்தை காட்டிலும் இன்னும் நிறமானது குறைந்து மங்கி இருப்பார்கள்.
 • ஒரு எதார்த்தமான உண்மை என்னவென்றால் செயற்கையான கிரீம் அனைத்துமே நிரந்தரமான சரும பொலிவை தராது.

முகம் வெள்ளையாக உணவு முறையும் நிரமாற்றமும் :

 • எத்தனை பேருக்கு தெரியும்?? நம்முடைய முகத்திற்கு கிரீம் இல்லாமல் சாப்பிடக்கூடிய உணவின் மூலமாகவே நிறத்தை அதிகரித்து பொலிவுடன் பளபளவென வைத்துக்கொள்ளலாம் என்பது.
 • சருமத்தை நிரந்தரமாக வெள்ளையாக மாற்ற நீங்க சாப்பிடக்கூடிய உணவு அதிகளவு முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால் மிகையாகாது.
 • எனவே முகத்தை எப்போதும் நீரேற்றத்துடனும்,புத்துனர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள 7 நாட்கள் இந்த உணவுகளை உணவில் சேர்த்துச் சாப்பிடுங்க.
 • அப்புறம் நிச்சயமாக உங்களை பார்ப்பவர்கள் கண்டிப்பாக கேப்பார்கள் என்ன கிரீம் யூஸ்பண்றனு…

முகம் வெள்ளையாக

முகம் வெள்ளையாக மோரும் சருமநிறமும் :

 • நீங்க தினமும் காலையில் மோரில் அதிகளவு உப்பு சேர்க்காமல் குடித்துவர அதில் உள்ள அமிலங்கள் இரத்த அணுக்களை புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்கும்.
 • இதனால் முகமானது தற்போது இருக்கக்கூடிய நிறத்தை காட்டிலும் சற்று கூடுதல் நிறத்தையும்,பொலிவையும் நிரந்தரமாக கொடுக்கும்.
 • அதேபோல மோர் குடித்துவர உடலில் இருக்கக்கூடிய சூட்டை குறைக்கும்.ஏனென்றால் அதிகப்படியான சூட்டின் காரணமாக ஒரு சிலர் எல்லாம் கருமையாக இருப்பீர்கள்.
 • எனவே இதை சாப்பிட்டு வர முகமும்,உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

https://amazeout.com/கழுத்தில்-உள்ள-கருமை-நிற/

எலுமிச்சை பழம் :

 • எலுமிச்சை பழம் சாறு குடித்து வந்தால், அதில் உள்ள சிட்ரிக் அமிலமானது முகத்தை வெள்ளையாக மாற்றக்கூடிய சக்தி உள்ளது.
 • அதோடு உடலில் மற்றும் சருமத்தில் உள்ள திசுக்களுக்கு புத்துணர்ச்சியை தருவதால் முகம் மின்னும்.சுருக்கம் ஏற்படாது.

வெள்ளரிக்காய் ஜூஸும் வெண்மையும் :

 • வெள்ளரிக்காய் தினமும் சாப்பிட்டு வர ,அதில் உள்ள சாறு தான் உங்களுக்கு முகப்பொழிவை அதிகரிக்கக்கூடிய முக்கிய காரணியாகும்.
 • அதேபோல உடற்சூட்டை குறைக்கவும் உதவியாக உங்களுக்கு இருக்கும்.கண்ணின் கீழ் கருவளையம் உள்ளவர்கள் வெள்ளரியை ஸ்லைஸ் போட்டு கண்ணில் வைத்தால் கருவளையம் குறையும்.
 • முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்.சருமத்தை மிருதுவாகவும் ,பொலிவுடனும் வைத்து இருக்கும்.

https://amazeout.com/கலோரிகள்-குறைவான-உணவுகள்/

முகம் வெள்ளையாக புரத உணவுகள் :

 • அதிகமாக உணவில் புரதம் உள்ள மீன்,முட்டைகள் சாப்பிட்டு வர முகமானது எளிதில் புத்துணர்ச்சியாக இருக்கும்.

தண்ணீர் :

 • ஒரு நாளைக்கு 2 – 3 லிட்டர் தண்ணீர் குடித்துவர உடலிற்கும் சரும அழகிற்கும் உதவியாக இருக்கும்.
 • அதிகமாக தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலமாக நச்சுக்களை வெளியேற்றும் .
 • இதனால் சருமம் பளபளவென தோற்றத்தை பெறக்கூடும்.உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
  ரத்தத்தை சுத்தப்படுத்தும் கேரட் ,பீட்ரூட் சாப்பிட்டு வந்தாலும் வெள்ளையாக மாறலாம்.
  இந்த உணவுகளை 7 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடனடியாக சரும நிறம் மாறுவது தெரியக்கூடும்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் “என்று சொல்லக்கூடிய வகையில் மனதை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளுங்கள்.

பளபளப்பான சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.