முடிஉதிர்வு தடுக்க எளிமையான வழிமுறைகள் :

முடிஉதிர்வு தடுக்க இயற்கையான  வழிமுறைகள் :

முடிஉதிர்வு தடுக்க உதவும் இயற்கையான முறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 • இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்வதுத்தான்.
 • ஆண், பெண் என இருவருடைய அழகின் ரகசியத்திலும் முடியானது முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
 • எனவே,அப்படிப்பட்ட முடி கொட்டுவது மனவருத்தத்தை தரக்கூடிய வகையில் உள்ளது.
  முடி உதிர்வது என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது.

https://amazeout.com/முகம்-வெள்ளையாக/

முடி உதிர்தலுக்கான காரணம் :

 • முடி வளர்ச்சிக்காக செயற்கையான முறையில் மார்க்கெட்டில் கிடைக்கும் ஹேர் ஆயில் மற்றும் அதிகப்படியான கெமிக்கள் உள்ள ஷாம்பு பயன்படுத்துவதால்,முடியானது அதிகமாக கொட்டுகிறது.
 • ஏனென்றால் செயற்கையான ஷாம்பு’வில் ,ஆயிலில் அதிகளவு ரசாயன மற்றும் கெமிக்கல் இருப்பதால் முடியானது உதிர்கிறது.
 • அதனைத்தொடர்ந்து உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றம் .
 • மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான சித்தனையில் அதாவது ஒரு விதமான பதற்றத்துடனும் யோசனையிலும் இருப்பவர்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.
 • மேலும் கருத்தரிப்பதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு நிறுத்துபவருக்கு ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படும்.
 • இதனாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.
 • தைராய்டு தொற்று, தலையில் பூஞ்சை நோய்கள் உள்ளவர்களுக்கும் தலைமுடி உதிரும்.
 • நீண்ட நாள் உடலில் ஆரோக்கியரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்பவருக்கும் முடியானது உதிரும்.
 • தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் முடி உதிரும்.
 • மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு அதிகளவு முடி அதிகளவு கொட்டும் .( pcod ) உள்ளவருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும்.
 • காரணம் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் .
 • உடல் அதிகப்படியான வெப்பத்தையும்,உஷ்ணத்தையும் கொண்டு இருக்கும் போதும் அதிகளவில் முடி கொட்டும்.
 • எனவே,இதில் ஏதாவது ஒரு காரணத்தால் தான் முடி கொட்டுகிறது.

முடிஉதிர்வு தடுக்க

முடிஉதிர்வு தடுக்க இயற்கை வழிகள் :

 • முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமான முறையில் வளர செய்ய இதை செய்தாலே போதும்.
  மிக எளியாகவும் அதிக பயனுள்ளதாகவும் இருக்கும்.
 • ஒரு வாரம் தொடர்ச்சியாக செய்தாலே நல்ல மாற்றமானது ஏற்படும் .

https://amazeout.com/கலோரிகள்-குறைவான-உணவுகள்/

முடிஉதிர்வு தடுக்க தேவையான பொருள் :

 1. கருவேப்பிலை- 1 பவுல்
 2. மருதாணி இலை-  1/2 கப்
 3. பெரிய நெல்லிக்காய்- 3
 4. செம்பருத்தி இலை- சிறிதளவு
 5. வெந்தயம் – 1/4 கிண்ணம்

செய்முறை :

 • கரிசலாகன்னி கீரையை சிறிது எடுத்து கழுவி சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அதோடு நெல்லிக்காயில் உள்ள கொட்டையை நீக்கி அதையும் அதோடு சேர்த்து அரைத்து அதோடு மருதாணி இலை மற்றும் ஊறவைத்த வெந்தயம் அதோடு சேர்த்து மீண்டும் அதிகளவு தண்ணீர் ஊட்றாமல் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
 • பிறகு தூய தேங்காய் எண்ணையை வாங்கி அதில் அரைத்த இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து விடுங்க.
 • 3 நாட்களுக்கு பிறகு அந்த எண்ணெய்’யை தினமும் பயன்படுத்தலாம்.
 • வாரத்திற்கு 4 முறை இந்த எண்ணெய் தடவி மசாஜ் செய்துகொள்ளுங்கள்.
 • அதேபோல அதிகப்படியான எண்ணெய் தலையில் போட்டு தேய்க்க கூடாது.
 • ஏனென்றால் தலையானது எண்ணெய் பசையுடன் இருந்தால் பூஞ்சைகள் மற்றும் தூசுக்கள் படியும்.
 • இதனாலும் முடியானது உதிரும்.
 • எனவே எப்போதுமே தலையில் எண்ணெய் வைக்கும் போது தேவைக்கு ஏற்ப குறைந்தளவு வைக்க வேண்டும்.

https://amazeout.com/fruits-avoided-by-sugar-patients/

முடிஉதிர்வு தடுக்க கரிசிலாங்கண்ணி :

 • இந்த கீரை உடலில் உள்ள உஷ்ணம் குறைத்து உடலை குளிர்ச்சியாக வைப்பதால் முடி உதிர்வை தடுக்கும் .

மருதாணி :

 • நரை முடி வராமல் தடுப்பதோடு முடி வளர்ச்சிக்கு மருதாணி பயன்படுகிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.

நெல்லிக்காய்&கருவேப்பிலை :

 • கருவேப்பிலையால் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை செரியாகும் அதோடு இதை சாப்பிடுவதால் முடி கருமையாக அடர்த்தியாக வளரும்.
 • நெல்லிக்காயும் முடி வளர்ச்சிக்கு உதவும்.உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகளை போக்குவதால் முடி உதிருவது குறைந்து முடியானது வளர ஆரம்பமாகும்.

இப்படி இந்த பொருள்கள் அனைத்தில் முடி வளருவதற்கான அதீத சத்துக்கள் நிறைந்து உள்ளது.

 

கழுத்தில் உள்ள கருமை நிறம் போகவேண்டுமா ?

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.