முடிவளர சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா ?
முடிவளர சாப்பிடவேண்டிய உணவுகள் :
முடிவளர சாப்பிடவேண்டிய உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
- பெண்களின் அழகில் நிறமானது எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று உள்ளதோ அந்த அளவிற்கு தலை முடியும் முக்கியத்துவமானது என்று சொன்னால் அது மிகையாகாது.
- எனவே, உடல் ஆரோக்கியத்திற்கும் சரி, சருமம் மற்றும் தலைமுடி வளருவதற்கும் சரி நாம் சாப்பிடக்கூடிய உணவு அதிகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
- என்னதான் முடி கொட்டாமல் அடர்த்தியாக வளர பல வழிகளை பின்பற்றினாலும்,சாப்பிடக்கூடிய உணவில் சில மாற்றத்தை ஏற்படுத்துவதால் ஆரோக்கியமான உடலை கொண்டு தலைமுடி உதிராமல் பார்த்துக்கொள்ளலாம்.
https://amazeout.com/முடிஉதிர்வு-தடுக்க/
முடிவளர சாப்பிடவேண்டிய உணவுகள் :
- உடலில் ஏற்படக்கூடிய சத்து குறைபாட்டின் காரணமாகவும் முடியானது அதிகளவு கொட்டுகிறது.
- அதாவது ,உடலில் முடி வளருவதற்கான முக்கியமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து போதியளவு இல்லாத காரணத்தால் முடி கொட்டுகிறது.
- அதோடு உடலில் ஏற்படக்கூடிய சில ஹார்மோன் மாற்றத்தின் காரணமாகவும் தான் முடியானது அதிகளவில் கொட்டுகிறது.
- அதேபோல,நாள்பட்ட நோய் பாதிப்பில் உள்ளவருக்கு தொடர்ந்து முடியானது கொட்டும்.
- ஏனென்றால் நோயிற்றபோது சாப்பிடக்கூடிய மருந்துகள் மற்றும் உடலில் சத்துக்கள் குறைவாக உள்ளதாலும் தான் தினமும் முடி பலவீனமடைந்து கொட்டுகிறது.
- எனவே, முடியானது ஆரோக்கியமாக வளர சாப்பிடக்கூடிய உணவு மிக அவசியமாகும்.
முடிவளர சாப்பிடவேண்டிய வெந்தயம் :
- வெந்தயத்தை தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து ஊறவிட்டு காலையில் எழுந்தவுடன் காய்ச்சி அந்த தண்ணீரை குடித்துவர முடியானது வளர ஆரம்பமாகும்.
- மாதவிடாய் பிரச்சனை சரியாகும் ,ஹார்மோன் மாற்றங்கள் சரியாகுவதாலும், முடியானது உதிராமல் வளரும்.
- அதோடு,இதில் “ஃபோலிக் அமிலம்,வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ” சத்துக்கள் நிறைந்து உள்ளதால் முடி உதிராமல் பார்த்து கொள்ளும்.
https://amazeout.com/முகம்-வெள்ளையாக
முடிவளர சாப்பிடவேண்டிய முட்டை :
- சாதாரணமாக முடி வலுமையாக இருப்பதற்கு புரத சத்து அதிகளவு உடலிற்கு தேவைப்படுகிறது.
- எனவே,அந்தவகையில் தான் முட்டையை தினமும் சாப்பிடக்கூடிய உணவில் காலை மற்றும் மதியம் ஒன்று என்ற அளவில் சேர்த்துக்கொள்வதால் உடலிற்கு புரதச்சத்து கிடைத்து தலைமுடி வலுவாக இருக்கும்.
- இதனால் முடியும் கொட்டாமல் வளரும்.அதோடு முடி வளர்ச்சிக்கு மிக அவசியமான உணவு என்றால் அது முட்டை என்று சொன்னால் மிகையாகாது.
முடிவளர நெல்லிக்காய் :
- தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- இந்த நெல்லிக்காயில் “விட்டமின் C” சத்துக்களும் இதில் அடங்கும்.
- இதனால் உடலில் பல சத்து குறைபாடுகளை சரிசெய்வதால் முடியானது வளரும்.
- அதோடு உடல் எடையை குறைக்கும்,இரத்தத்தின் அளவையும் சரியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
https://amazeout.com/இரவு-நல்ல-தூக்கம்-வர-என்ன/
கற்றாழை :
- சுத்தமான கற்றாழையை எடுத்து கழுவி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் போல வாரத்தில் 3 நாட்கள் குடித்துவந்தால் முடி வளர்ச்சி பெறும்.
- அதோடு பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.
- பெண்களுக்கு வெளிப்படுதல் பிரச்சனை இருந்தால் குணமாகும்.
- இதில் புரோடியாலிக் என்சைம்கள் இருப்பதால் இறந்த மயிர்க்கால்களை வளர்ச்சியடைய செய்யும்.
எனவே இந்த உணவுகளை தினமும் நீங்க சாப்பிட்டுவந்தால் முடிக்கு தேவையான ஊட்டசத்துகள் கிடைப்பதால் முடி உதிர்வு இல்லாமல் முடி அடர்த்தியாக வளர ஆரம்பமாகும்.