முடி கொட்டுவதற்கான காரணம் என்னென்ன தெரியுமா ?
முடி கொட்டுவதற்கான காரணம் :
தலையில் முடி கொட்டுவதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- தற்போது இருக்கும் இந்த பரபரப்பான உலகத்தில் தலைமுடி உதிர்வு பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது.
- காரணம் நம்முடைய வாழ்க்கைமுறை தான்.நாம் சாப்பிடக்கூடிய உணவு முறைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக தான் முடியானது கொட்டுகிறது.
முடி உதிர்வதற்கான காரணம் :
- முடி உதிர்வதற்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் நம்முடைய சோம்பேறிதனமும் இதில் சொல்லலாம்.
- ஏனென்றால் முடியை ஆரோக்கியமாக வளருவதற்கு சாப்பிடக்கூடிய உணவு எந்த அளவுக்கு முக்கியமோ,அந்த அளவுக்கு நாம் முடியை சற்று பராமரிக்க வேண்டியதும் அவசியமாகும்.
- இதில் பலருமே இதை செய்வதால் முடி உதிரும் என்று தெரியாமலே சிலர் சில விஷயங்களை அவர்களின் அன்றாட வாழ்க்கையில் செய்கிறார்கள்.
- இதனால் இறுதியாக பலருக்கும் சொட்டைக்கூட விழும்.
https://amazeout.com/முடிவளர-சாப்பிடவேண்டிய-உ/
முடி கொட்டுவதற்கான காரணம் ஈர தலையில் சீப்பு :
- அவசரமாக எழுந்து குளித்துமுடித்து வேலைக்கு செல்லக்கூடிய பலருமே ஈரத்தலையிலே சீப்பு போட்டு தலைசீவுவார்கள்.
- இன்னும் ஒரு சிலரோ ஈரமாக இருக்கும் போது சீவுன அதிகளவு சிக்குச்சேராது என்றும் சொல்வார்கள்.
- இதெல்லாம் முற்றிலும் தவறு.
- ஏனென்றால் ஈரமாக இருக்கும் முடியானது மெல்லியதாக இருக்கும்.
- இதில் மேலும் சீப்பு போட்டு தலைவாரும் போது முடி உதிர்வு அதிகளவில் ஏற்படும்.
- இதை தொடர்ந்து செய்யும்போது நாளடைவில் முடி உதிர்வு அதிகமாகும்.பின்பு கட்டுப்படுத்துவது கடினம்.
- எனவே,நீங்க முடி உதிர்வை தடுக்கவேண்டும் என்றால் தலைமுடி காய்ந்தப்பின் சீவவேண்டும்.
முடி கொட்டுவதற்கான காரணம் தலைமுடி கட்டுதல் :
- நம்மில் பலரும் தலைக்கு குளித்தவுடன் டவெல் அதாவது துண்டை கொண்டு இறுக்கமாக முடியை கட்டிக்கொள்வர்கள்.
- காரணம் அப்போது தான் தண்ணீர் வேகமாக துண்டில் வடிந்து முடியானது ஈரமில்லாமல் காயும் என்று சொல்லப்படுகிறது.
- ஆனால் உண்மையில் இப்படி செய்தால் முடியானது அதிகமாக உதிரும்.
- ஏனென்றால் இப்படி செய்தால் தலைமுடி வேற்பகுதி வலுவிலந்து முடி உதிரும்.
https://amazeout.com/தலைமுடி-வளர-வழிகள்/
முடி கொட்டுவதற்கான காரணம் தலைமுடியை தேய்ப்பது :
- தலைக்கு குளித்தவுடன் ஈரமாக தலைமுடி இருக்கும் போது முடியே வலுவிழந்து காணப்படும்.
- இந்த நேரத்தில் துண்டை கொண்டு நாம் தலைமுடியை தேய்க்கும் போது அதிகளவில் முடியானது உதிரக்கூடும் .
ஹேர் ட்ரையர் :
- முடி காயவைப்பதற்கு ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் போது , அதில் இருந்து வெளிவரக்கூடிய வெப்பமானது டேமேஜ் ஆகி உள்ள முடியை இன்னும் அதிகமாக சேதப்படுத்தும்.
- எனவே உங்களுக்கு ஆல்ரெடி முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் ஹேர் ட்ரையர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதாக இருக்கும்.
https://amazeout.com/முடிஉதிர்வு-தடுக்க/
ஈரத்துடன் தூங்குதல் :
- சிலருக்கு தலைக்கு குளித்தவுடன் நல்ல ஆரோக்கியமான தூக்கம் வரும்.அதனால் பலரும் முடி காயாமல் தூங்கி விடுவார்கள்.
- இதனால் ஈரமான தலைமுடி தலையணையில் உரசுவதால் முடியானது நாளடைவில் அதிகளவு கொட்ட தொடங்கும்.
வாசனை மிகுந்த ஷாம்பு :
- அதிகப்படியான செயற்கையான வாசனை மிகுந்த ஷாம்பு பயன்படுத்தும் போது அதிகளவு கெமிக்கல் தலைமுடி வேர்பகுதியை தாக்குவதால் முடி சேதாரம் அடைகிறது.
- இதனால் நாம் தலைவாரும் போது அதிகளவு முடி உதிருக்கிறது.
- அதேபோல கட்டாயம் வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 முறையாவது தலைக்கு குளித்தால் மட்டுமே தலையில் அழுக்கு சேராமலும் முடி உதிராமல் இருக்கும்.
எனவே,இனி இப்படி எளிமையாக செய்து வந்தால் முடி உதிராமல் வளர ஆரம்பமாகும்.