முட்டையின் பயன்கள் என்னென்ன தெரியுமா ?

முட்டையின் பயன்கள் இவ்வளவு இருக்கிறதா ?

முட்டையின் பயன்கள் என்னென்ன??இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டையின் பயன்கள் மற்றும் உடல் ஆரோக்கியமும் :

 • தற்போது இருக்கக்கூடிய இந்த பரபரப்பு உலகில் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது சற்று கடினமாகவே உள்ளது.
 • எனவே மிக எளிமையான முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முட்டையானது அதிகளவு பயன்படுகிறது.
 • முட்டையில் அதிகளவு புரதச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடலிற்கு ஆரோக்கியமாக இருக்கிறது.
 • முட்டையின் மஞ்ச கருவில் வைட்டமின் டி சத்து அதிகளவில் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களுக்கு நன்றாக வலுசேர்க்கக்கூடிய வகையில் உள்ளது.
 • இதை சாப்பிடுவதால் கண் நோய்கள் மற்றும் கண்ணில் புரை ஏற்படுவதைத் தடுக்கும்.
  அதோடு பலரும் சிரமப்படக்கூடிய உடல் எடை குறைக்கவும் இது உதவுகிறது.

https://amazeout.com/முகம்-வெள்ளையாக/

கருவடையசெய்யும் முட்டையின் பயன்கள் :

 • திருமணம் ஆகி கருவடையாமல் இருக்கக்கூடிய பெண்கள் தினமும் 2 முட்டையை காலை ,மதியம் என சாப்பிட்டு வர விரைவில் கருவடையலாம்.
 • ஏனென்றால் முட்டையில் வைட்டமின் பி9 சத்துள்ளதால்,விரைவில் கருத்தரிக்க முடியும்.
 • அதேபோல கருவுற்ற பெண்கள் அதாவது கர்ப்பமாக உள்ளவர்கள் தினமும் 2 முட்டை சாப்பிட்டு வர குழந்தையானது ஆரோக்கியமாக இருக்கும்.
 • அதோடு ஐ-க்கு’வும் அதிகமாக இருக்கும்,எந்த வித குறையும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
 • மேலும் கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய சோர்வும்,மன அழுத்தமும் நீங்கும்.

 

புற்றுநோயை தடுக்கும் முட்டை :

 • தற்போது இருக்கும் லைஃப்ஸ்டைலில் நிறைய பெண்களுக்கு புற்றுநோய் அதிகளவில் வருகிறது.
 • முட்டையில் கோலினானது உள்ளது.இது மூளையின் செயல்பாட்டை பாதுகாக்கும்.
 • ஒரு ஆய்விலே கூட இளம் வயதினர் தினமும் குறைந்தளவு 1 முட்டையை சாப்பிட்டு வருவதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

https://amazeout.com/கலோரிகள்-குறைவான-உணவுகள்/

கல்லீரல் ஆரோக்கியம்  :

 • தினமும் வேகவைத்த வெள்ளை கரு முட்டையை இரண்டு சாப்பிட்டு வந்தால் கல்லீரலை பாதுகாப்பாகவும் ,அதன் செயல்பாட்டையும் பராமரிக்கும்.
 • கல்லீரல் பராமரிப்புக்கு தேவையான ஊட்டசத்துகள் இதில் அதிகளவு உள்ளது.

உடல் எடையை குறைக்கும் :

 • ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க தினமும் டயட்டில் 1 முட்டையை சேர்த்து சாப்பிடுங்க.
 • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.கலோரிகள் குறைவாகவும் புரத சத்துக்கள் அதிகமாக இருப்பதால்,உடல் எடையை குறைக்கும்.
 • அதேபோல முட்டையில் கொழுப்பும் இருக்காது.

https://amazeout.com/diet-இல்லாமல்-உடல்-எடை-குறைப்/

சரும அழகும் முட்டையின் பயன்கள் :

 • முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிட்டு வந்தால் முகமானது சுருக்கமில்லாமல் பளிச்சென்று மின்னும் முகத்தை பெறலாம்.
 • சருமத்தை பளிச்சிட செய்யக்கூடிய வைட்டமின்கள் இதில் உள்ளது.
 • முட்டை வெள்ளைகருவில் சிறிது தேன் மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் தடவிவர முகமானது பொலிவுடன் இருக்கும்.
 • இந்த பேஷ்பேக் வாரம் 2 முறை பயன்படுத்தினால் முகமானது பளிச்சென்று மாறும்.ஏனென்றால் இதில் சேர்க்கக்கூடிய கடலைமாவு மற்றும் தேன் முகத்தின் நிறத்தை மாற்ற அதிகளவு பயன்படுகிறது.

இதய நோயை தடுக்கும் முட்டையின் பயன்கள் :

 • முட்டையில் ஒமேகா 3 நல்ல கொழுப்புகள் உள்ளதால் இதய நோய் வராமல் தடுக்க உதவும்.
  எனவே இதய பலவீனமாக உள்ளவர்கள் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும்.

எனவே முட்டையை தினந்தோறும் உங்களுடைய உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

தொப்பை குறைய எளிய வழிகள் !

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.