DIET இல்லாமல் உடல் எடை குறைப்பது எப்படி ?

DIET இல்லாமல் உடல் எடையை எளிமையாக குறைக்கும் ரகசியங்கள்:

  • இப்ப இருக்க கூடிய காலக்கட்டத்தில் நிறைய பேர் வேலை இல்லாமல் இருப்பதால் உடல் எடை அதிகரித்து உள்ளது. இதனால் நிறைய பேருக்கு இந்த பிரச்சினை மனதளவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • பொதுவாக குண்டாக இருப்பவர்களை பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்து, பட்ட பெயர் வைத்து கேலி செய்து வருகின்றனர்.
  • இதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ற உழைப்பு நம் உடலுக்கு இல்லாமல் இருப்பது தான் முதல் காரணம் என்றே சொல்லலாம்.
  • இந்த உடல் எடையை குறைக்க என்ன வழி என்று தொடர்ந்து சிந்தித்து வருபவர்களுக்கு இந்த பதிவு ஒரு பயன் உள்ள தகவலாக இருக்கும்.
  • பொதுவாக உடல் எடை குறைய நீங்கள் உணவு விஷயத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. ஒல்லியாக இருக்கும் பல பேர்கள் சில தந்திரங்களை உபயோகப்படுத்தி தான் அவர்கள் இன்றும் ஒல்லியாக காட்சி தருகிறார்கள்.
  • இந்த பதிவில் டயட்(diet) இல்லாமல் உடல் எடையை குறைக்க உதவும் சில எளிமையான வழி முறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
  • பொதுவாக காலை உணவு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.அதுவும் புரதம் கலந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதேபோல உணவை மெதுவாக மென்று சாப்பிடவேண்டும்.ஏனென்றால் பலரும் சாப்பாட்டை மெல்லாமல் முழுங்கிவிடுவார்கள்.
  • எனவே மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் செரிமான கோளாறு பிரச்சனை தீர்ந்து உடல் எடையம் வேகமாக குறையும்.

Diet இல்லாமல் உடல் எடை குறைய

Diet இல்லாமல் உடல் எடை குறைய மேலும் சில வழிகள் :

சுரைக்காய்:

  • உடல் எடை குறைய வாரம் இருமுறையாவது சுரைக்காய் சாப்பிட்டு வர உடல் எடையும் குறையும்.
  • சுரைக்காயிக்கு வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் இருக்கிறது.

பப்பாளி:

  • பப்பாளி பழம் வாரம் 3 முறை சாப்பிட உடல் எடை குறையும். மேலும் பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்து முகமானது அழகாகவும் பொலிவாகவும் மாறும்.

https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/

எலுமிச்சை:

  • எலுமிச்சை பழச்சாறில் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். சூடு தண்ணீரில் எலுமிச்சை தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்க உடல் எடை குறையும்.

பூண்டு:

  • பொதுவாக நிறைய பேருக்கு வெங்காயம், பூண்டு பிடிக்காது. காலை வெறும் வயிற்றில் 3 பல் பூண்டை நசுக்கி அதை சூடு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க உடல் எடை குறையும்.

https://amazeout.com/சர்க்கரை-நோயாளிகள்-அண்ணா/

அருகம்புல்:

  • அதிகாலை வேலையில் அருகம்புல் சாறு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சினை தீருவதோடு உடல் எடை குறையும்.

வாழை தண்டு:

  • வாழை தண்டு அதிக நீர் சத்து நிறைந்த உணவாகும்.உடல் எடை அதிகம் உள்ளவர்கள் வாழை தண்டு ஜுஸ் சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் கல் இருந்தால் அது கரைவதோடு தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

நடைப்பயிற்சி:

  • தினமும் காலை,மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும்.உடற்பயிற்சி செய்வதால் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்பு கரைவதோடு உடலுக்கு வேலை கொடுப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

https://amazeout.com/சர்க்கரை-நோய்-உள்ளவர்கள்/

கொள்ளு:

  • வாரத்தில் இரண்டு முறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிடலாம். கொள்ளுவை வேக வைத்து சாப்பிட உடல் எடை குறைவதோடு,உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
  • எனவே இதையெல்லாம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர சுலபமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.